தமிழகம்

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கழிவறையில் செல்போனில் மாணவியை படம் பிடித்த உதவி பேராசிரியர் கைது

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள கழிவறையில் செல்போன் கேமரா மூலம் மாணவியைப் படம் பிடித்ததாக தற்காலிக உதவி பேராசிரியரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை ஐஐடியில் இந்தியா முழு வதும் இருந்து பல்வேறு மாநிலங் களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற் பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். மாணவ, மாணவியருக்கு ஐஐடி வளாகத்திலேயே நவீன வசதிகளுடன் தனித்தனி விடுதிகள் உள்ளன.

இந்நிலையில் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டுள்ள (பிஎச்டி) மாணவி ஒருவர் ஐஐடி வளாகத்தில் உள்ள கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே வட்ட வடிவில் துளையும், அதில் கரும்புள்ளி ஒன்று தெரிவதையும் பார்த்துள்ளார்.

அருகில் சென்று பார்த்தபோது துளைக்குள் செல்போன் ஒன்றும் அதன் கேமரா கண்கள் கழிவறையைப் பார்ப்பதுபோல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கழிவறைக்குப் பக்கத்தில் ஆண்கள் கழிவறை இருப்பதால் அந்தப் பக்கமிருந்து யாரோ படம் எடுப்பது தெரிந்து வெளியே வந்து கூச்சலிட்டுஉள்ளார்.

சத்தம் கேட்டு உடனடியாக சக மாணவ, மாணவியர் அங்கு திரண் டுள்ளனர். உடனடியாக ஆண்கள் கழிப்பறைக்குச் சென்ற மாணவர்கள், அங்கு மறைந்திருந்த இளைஞரைப் பிடித்து வெளியே கொண்டு வந்தனர். அவரை ஐஐடி நிர்வாகத்தினர் கோட்டூர் புரம் காவல் நிலைய போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

போலீஸார் நடத்திய விசாரணை யில் பிடிபட்டவர் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த சுபம் பானர்ஜி (27) என் பதும், இவர் எம்.டெக் முடித்து ஐஐடி யில் தற்காலிக உதவி பேராசிரிய ராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந் துள்ளது. பெண்கள் கழிவறையில் தண்ணீர் செல்லும் பைப்புகள் இடையே உள்ள துளை வழியாக செல்போனை வைத்து, பெண்கள் கழிவறைக்கு செல்லும்போது அவர் களை வீடியோ எடுப்பதை வாடிக்கை யாக அவர் வைத்திருந்தாக போலீஸார் தெரிவித்தனர்.

சிறையில் அடைப்பு

இதைத் தொடர்ந்து சுபம் பானர்ஜி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவரது செல்போனை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கழிவறையில் தண்ணீர் செல்லும் பைப்புகள் 
இடையே வட்ட வடிவில் துளையும், அதில் கரும்புள்ளி ஒன்று தெரிவதையும் பார்த்துள்ளார்.

SCROLL FOR NEXT