தமிழகம்

ஊழியர் பற்றாக்குறையால் பாதிப்பு: பிஎஸ்என்எல் சேவை தொடர மாற்று ஏற்பாடு செய்ய கோரிக்கை

செய்திப்பிரிவு

பிஎஸ்என்எல் - என்எஃப்டிஇ சங்கத்தின் மாநில செயலாளர் சி.கே.மதிவாணன் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிறுவனத்தில் விருப்ப ஓய்வு அமலாக்கத்துக்குப் பிறகு கடும் நெருக்கடியை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்தித்து வருகிறது. மத்திய அரசின் உண்மையான நோக்கம் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்து லாபத்தில் இயங்க வைப்பது அல்ல. மாறாக, இந்நிறுவனத்தின் பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களை கபளீகரம் செய்வதுதான்.

ஊழியர் பற்றாக்குறையால் சேவையின் தரம் குறைவதோடு, பணிகளும் தாமதமடைகின்றன. நிர்வாகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இல்லையெனில், படுமோசமான விளைவுகளை பிஎஸ்என்எல் நிறுவனம் சந்திக்க நேரிடும்.

SCROLL FOR NEXT