தமிழகம்

ஜெஇஇ 2-வது கட்ட தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பம்

செய்திப்பிரிவு

என்ஐடி, ஐஐடி மற்றும் மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேருவதற்கு ஜெ.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

என்ஐடி என்று அழைக்கப்படும் தேசிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சேர ஜெஇஇ மெயின் தேர்வு மதிப்பெண் போதும். ஆனால், ஐஐடியில் சேர வேண்டுமானால் 2-வது கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வும் எழுத வேண்டும்.

கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஜெஇஇ எழுத்துவழி தேர்வு மற்றும் ஆன்லைன் தேர்வின் முடிவு சனிக்கிழமை வெளியிடப்பட்டது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, மெயின் தேர்வில் 1.5 லட்சம் பேர்t தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் விவரம் www.jeemain.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் அட்வான் ஸ்டு தேர்வுக்கு விண்ணப் பிக்க முடியும். ஐஐடியில் சேருவதற்கான அட்வான்ஸ்டு தேர்வு மே 25-ம் தேதி நடத்தப்பட இருக்கிறது. இதற்கு மே 4-ம் தேதி பகல் 12 மணி முதல் 9-ம் தேதி மாலை 5 மணி வரை ஆன்லைனில் (www.jeeadv.nic.in) விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

SCROLL FOR NEXT