தமிழகம்

புகையிலைப்பட்டி ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்: 21 மாடுபிடிவீரர்கள் காயம்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல் அருகே புகையிலைப்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கி வீரர்கள் பரிசுகளைப் பெற்றனர். இதில் 21 பேர் காயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் புகையிலைப்பட்டியில் புனிதசந்தியாகப்பர், செபஸ்தியார் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டுபோட்டி நடைபெற்றது.

இதில் 620 காளைகள் பங்கேற்றன. கால்நடைதுறை சார்பில் காளைகள் பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர். 400 க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரர்கள் பல்வேறு பிரிவுகளாக களம் இறக்கப்பட்டனர். இவர்களுகும் மருத்துவபரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ஜல்லிகட்டுப் போட்டியை திண்டுக்கல் கிழக்கு வட்டாட்சியர் மீனாதேவி கொடியசைத்து தொடங்கிவைத்தார். சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடிவீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர்.

வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தங்கக்காசு, வெள்ளிக்காசு, ஆட்டுக்குட்டி, கட்டில், சில்வர் பாத்திரங்கள் என ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. மாடுகள் முட்டியதில் வீரர்கள் 21 பேர் காயமடைந்தனர். இவர்களுக்கு அங்கேயே அமைக்கப்பட்டிருந்த மருத்துவமுகாமில் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT