சென்னை சென்ட்ரல் - திருவள் ளூர் இடையே உள்ள ரயில் நிலையங்களில் பெரிய நிழற்குடை களை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
சென்னை சென்ட்ரல் - திருவள் ளூர் மார்க்கத்தில் உள்ள ரயில் நிலையங்களில் நிழற்குடை கள் சிறிய அளவில் அமைக்கப் பட்டுள்ளன. இதனால், வெயில் மற்றும் மழைக் காலங்களில் ரயில் பயணிகள் ஒதுங்க இட மின்றி அவதிப்படுகின்றனர். இந் நிலை யில், இந்த வழித்தடத்தில் உள்ள ரயில் நிலையங்களில் இருக் கும் நிழற்குடைகளை பெரியவை யாக மாற்றும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. மேலும், மின்சார ரயில்களில் கூடுதல் பெட்டி களை இணைக்க வசதியாக நடை மேடைகளை விரிவுபடுத்தும் பணி யும் மேற்கொள்ளப்பட வுள்ளது.
இது தொடர்பாக சென்னை கோட்ட ரயில் பயணிகள் ஆலோ சனை குழு முன்னாள் உறுப்பினர் கே.பாஸ்கர் ‘தி இந்து’விடம் கூறிய தாவது:
தாம்பரம் கடற்கரை இடையே இருந்த மீட்டர்கேஜ் பாதை கடந்த 2000-ம் ஆண்டில் பிராட்கேஜ் ஆக மாற்றப்பட்டபோது அந்த வழித் தடங்களில் இருந்த ரயில் நிலை யங்களில் பெரிய நிழற் குடைகள் அமைக்கப்பட்டன. ஆனால், தற் போது மாம்பலம், தாம்பரம் உள்ளிட்ட முக்கியமான ரயில் நிலையங்களில் மட்டுமே விரைவு ரயில்கள் நிற்கின்றன. எனவே, மற்ற ரயில் நிலையங் களில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் பாதையில் நிறுவப்பட்ட நிழற்குடைகள் வீணாகத்தான் இருக்கின்றன.
இந்த நிழற்குடைகளை, சென்ட் ரல் திருவள்ளூர் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையங்களில் மாற்றியமைக்க வேண்டுமென ரயில்வே வாரியத்துக்கு திருவள்ளூர் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோரிக்கை மனு அளித்தனர்.
அதற்கு பதில் அளித்துள்ள ரயில்வே வாரியம் சென்ட்ரல் திருவள்ளூர் மார்க்கத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் சிறிய நிழற்குடை களை பெரியவையாக மாற்றும் பணி விரைவில் தொடங்கப்பட வுள்ளன என்று தெரிவித்துள்ளது.