தமிழகம்

ஆடியோ பதிவு வெளியானது குறித்து சிறையில் யுவராஜிடம் விசாரணை

செய்திப்பிரிவு

டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை தொடர்பாக ஆடியோ பதிவு ஒன்றை வெளியிட்டது குறித்து திருச்சி சிறையிலுள்ள யுவராஜிடம் விசாரணை நடக்கிறது.

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை வழக்கில் கைதான சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்தவரும், தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனருமான யுவராஜ் 2018 முதல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுவுள்ளார். கடந்த ஜன.16-ல் யுவராஜின் அறையில் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர்.

அப்போது, சிம் கார்டுகளுடன் 2 செல்போன்கள், சார்ஜர் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து அவரை, சிறையிலுள்ள தண்டனை தொகுதியில் தனி அறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், சிறைக்குள் இருந்தபடியே யுவராஜ் பேசி அனுப்பியதாக ஒரு ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியது. அதில், கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்த திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கைசிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என யுவராஜ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஆடியோ எப்படி வெளியானது என்பது குறித்து திருச்சி சரக சிறைத் துறை டிஐஜி சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் சிறைகண்காணிப்பாளர் சங்கர் உள்ளிட்டஅதிகாரிகள் யுவராஜ் அடைக்கப்பட்டுள்ள அறையில் ஆய்வு செய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

SCROLL FOR NEXT