தமிழகம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு- மேலும் 2 வழக்குகளில் ஜெயக்குமார் கைது

செய்திப்பிரிவு

இடைத்தரகர் ஜெயக்குமார், டிஎன்பிஎஸ்சி பணியாளர் ஓம் காந்தன் ஆகிய இருவரையும் மேலும் 2 வழக்குகளில் சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சியின் குரூப்-2, குரூப்-2ஏ, குரூப்-4 தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு களில் இதுவரை 51 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலை யில் குரூப்-4 தேர்வில் இடைத்தரக ராக செயல்பட்டதாக ஜெயக்குமார், மோசடிக்கு உதவி செய்ததாக டிஎன்பிஎஸ்சி அலுவலக பணி யாளர் ஓம்காந்தன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இருவரும் குரூப்-2மற்றும் குரூப்-2ஏ தேர்வுகளி லும் பணம் வசூல் செய்து மோசடி யில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப் பட்டது. இதனையடுத்து இருவர் மீதும் மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர்.

குரூப்-4 தேர்வில் ஏற்கெனவே இருவரும் காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து தற்போது புதிதாக வேறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்து இருப்பதால், இந்த வழக்குகளில் அவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை நீதி மன்றத்தில் அனுமதி கோரி சிபிசிஐடி சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT