மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள சரணாலயங்கள், வனவிலங்கு உய் விடங்கள், காப்பகங் களில் தற்போது பனிக்காலம் முடிந்து கோடைக்காலத்தின் முன்பருவ மான இலையுதிர்காலம் தொடங்கி யுள்ளது. ஜனவரி கடைசி வாரத்தில் மரங்களில் இருந்து இலைகள் விழத் தொடங்கினால் மார்ச் மாதத்தின் இறுதியில் மரங்கள் அனைத்தும் இலைகள் இன்றி மொட்டையாக காட்சியளிக்கும்.
குறிப்பாக வறட்சியால் ஊசிப்புல், தைலப்புல் மற்றும் புதர்கள்ஆகியன காய்ந்தும், தேக்கு, மூங்கில் உள்ளிட்ட மரங்கள் இலைகளை முற்றிலும் உதிர்த்தும் காணப்படும். இலைகள் காய்ந்து சருகுக ளாக மாறி வனம் முழுவதும் கொட்டிக் கிடக்கும். கோடை காலத்தில் வனப்பகுதியில் இயற்கையாகவும், செயற்கை யாகவும் தீ விபத்துகள் ஏற்படுகின் றன.
இவற்றால் அரிய வகை வனவிலங்குகளும், தனித்துவம் மிக்க மரம், செடி, கொடிகளும் தீக்கிரையாகி வருகின்றன. வனத்தையொட்டி உள்ள பட்டாக் காடுகளில் காய்ந்த சருகுகளுக்கு தீ வைக்கும்போது அது அருகில் உள்ள பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்கும் பரவுகிறது.
மேலும் வனப்பகுதிக்குள் ‘ட்ரெக்கிங்’ செல்பவர்கள், வனத்தின் உள்ளே செல்லும் நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் சுற்றுலா செல்பவர்கள் சமையல் செய்வதால் தீ விபத்து பரவுகிறது. சிகரெட், பீடியை தூக்கிப்போடுவதாலும் வனங்களில் தீ பற்றுகிறது. இதில் மனிதனால் செயற்கை யாக உருவாக்கப்படும் காட்டுத்தீயால் தான் அதிக அளவு சேதம் ஏற்படுகி றது.
இவ்வாறு வனத்தில் ஏற்படும் தீ விபத்துகளை கட்டுப்படுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள 6 வனச்சரகங்களில் சர்க் கார்பதி, கவர்கல், சின்னக்கல் ஓடை, புங்கன்ஓடை, கட்டளை மாரியம்மன் கோயில், கரியன் சோலை,அம்புலிபாறை, ஆனைகுந்தி, ஈச்சம்பதி, ஊஞ்சக்கல்மேடு உள்ளிட்ட இடங்களில் 34 வேட்டைத் தடுப்பு முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன.
இங்கிருந்து 76 தீத்தடுப்பு கோடுகளை கண்காணிக்கும் பணி யில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோடை காலத்துக்கு முன்பா கவே தீத் தடுப்புக் கோடுகள் அமைக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அடர்ந்த வனங்களில் மரம், செடி, கொடிகள், புதர்கள் தொடர்ச்சியாக காணப்படும். எனவே, குறிப்பிட்ட இடைவெளியில் மரம், செடி, கொடிகளை வெட்டி தீத்தடுப்பு கோடுகளை அமைப்பது வழக்கம். இதற்காக தற்போது ஆனைமலை புலிகள்காப்பகத்தின் மாநில எல்லைகளான பரம்பிக்குளம், இரவிக்குளம், சின்னாறு வனப்பகுதிகளில் 10 மீட்டர் அகலத்துக்கு தீத்தடுப்பு கோடுகளை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, ‘காட்டுத்தீ குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தீ உருவாக வாய்ப்புள்ள இடங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள புதர்கள் அகற்றப்பட்டு எதிர் தீ வைத்து அழிக்கப்படுவதன் மூலம்எதிர்பாராத விதமாக தீ விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 300 கி.மீ தொலைவுக்கு தீத்தடுப்பு கோடுகள் அமைக்கப் படும்.
இப்பணியில் வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள்ஈடுபடுத்தப்படுவர். வனத்தில் தீப்பற்றும் இடங்கள் செயற்கைக் கோள் உதவி யுடன் கண்டறியப்பட்டு எஸ்எம்எஸ் மூலம் எச்சரிக்கை செய்யப் படுவதால் அப்பகுதிக்கு விரைந்து செல்ல முடிகிறது. காட்டுத் தீயை அணைக்கும் பணிக்கு ‘லீப் புளோயர்’ உள்ளிட்ட நவீன கருவிகள் இந்தாண்டும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்து வனச்சரகங்களுக்கும் தீ அணைக்கும் கருவிகள், புகையில் இருந்து தற்காத்து கொள்ளும் முகமூடிகள் மற்றும் கையுறைகள், தீப்பிடிக்காத உடைகள் உள்ளிட்டவை வழங்கப் பட்டுள்ளன’ என்றனர்.