கோப்புப் படம் 
தமிழகம்

டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரத்தில் ஆன்லைனில் ‘மேஜிக்’ பேனா வாங்கி தந்தவர் கைது

செய்திப்பிரிவு

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விவ காரத்தில் கைது செய்யப்பட்டுள்ள இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு, தானாக அழியும் மை கொண்ட பேனாவை வாங்கித் தந்த நபரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் முறை கேட்டில் ஈடுபட்டதாக இதுவரை 41 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.

தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட வர்கள் தானாக அழியும் மை கொண்ட மேஜிக் பேனாவால் தேர்வு எழுதியதாகவும், அந்த விடைகள் அழிந்த பிறகு, இடைத் தரகர் ஜெயக்குமார் மற்றும் டிஎன்பிஎஸ்சி பணியாளர்கள் சிலர் விடைத்தாளில் சரியான விடைகளை நிரப்பி, வைத்துவிட்டதாகவும் சிபிசிஐடி போலீஸார் கூறுகின்றனர்.

இடைத்தரகர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார். அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, தானாக அழியும் மை கொண்ட பேனாவை, சென்னை பாரிமுனை யில் ஒரு கடையில் வாங்கியதாக ஜெயக்குமார் கூறியுள்ளார். அந்த கடையில் விசாரித்தபோது, அது பொய் தகவல் என்பது தெரியவந்தது.

இதன் பிறகு, புரசைவாக்கத்தை சேர்ந்த அசோக் என்பவர் மூலம் அந்த பேனாவை வாங்கியதாக ஜெயக்குமார் கூறியதை அடுத்து அவரையும் கைது செய்துள்ளனர்.

அந்த மேஜிக் பேனாவை ஆன் லைனில் ரூ.300-க்கு வாங்கியதாக அசோக் தெரிவித்துள்ளார். பின்னர், முறைகேடாக தேர்வு எழுதிய அனை வருக்கும் ஜெயக்குமார் மூலமாக அந்த மேஜிக் பேனாக்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று சிபிசிஐடி போலீஸார் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், இந்த விவகாரத்தில் நேரில் ஆஜராகுமாறு கடலூரைச் சேர்ந்த 12 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

SCROLL FOR NEXT