ப.சிதம்பரம் 
தமிழகம்

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்: முதல்வருக்கு ப.சிதம்பரம் வேண்டுகோள்

செய்திப்பிரிவு

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தினார்.

குடியுரிமைச் சட்டம், மத்திய பட்ஜெட் குறித்த பொதுக்கூட்டம் தேவகோட்டையில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் பேசியதாவது:

சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டுவர வேண்டும். தயக்கம் இருந்தால், நாங்கள் கொண்டு வரும் தீர்மானத்தை நீங்கள் ஆதரித்து நிறைவேற்ற வேண்டும்.

அதிமுக உண்மையிலேயே இலங்கை, பர்மா தமிழர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்றால், குடியுரிமைச் சட்டத்துக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். நிறைவேற்றினால் நீங்கள் தமிழர் பக்கம் இருக்கிறீர்கள் என்று பொருள். நிறைவேற்ற மறுத்தால் நீங்கள் தமிழர்களுக்குத் துரோகம் செய்கிறீர்கள் என்று பொருள். இச்சட்டத்தை உச்ச நீதிமன்றம் செல்லாது என்று அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT