தமிழகம்

தேர்தல் பணி: அதிமுக நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் -இபிஎஸ் ஆலோசனை

செய்திப்பிரிவு

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான பன்னீர்செல்வம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.

அதிமுக மனுக்கள் பரிசீலனைக் குழுவைச் சேர்ந்த, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், அமைப்புச் செயலாளர் நத்தம் இரா. விசுவநாதன், அமைச்சர்கள் பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோர் முன்னிலையில் இன்று காலை இந்தக்கூட்டம் நடைபெற்றது.

தேனி, கோவை மாநகர், கோவை புறநகர், அரியலூர், தருமபுரி, திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள்மாவட்டச் செயலாளர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், மாவட்டக் அதிமுக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நிர்வாகிகள், சார்பு அணிகளின் மாநில துணை நிர்வாகிகள், மாவட்ட அணிச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதிக் கழகச் செயலாளர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் முக்கிய கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாரியாக நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டங்களில், அதிமுக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

SCROLL FOR NEXT