சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் வரும் திங்கள்கிழமை (பிப்.17) தொடங்கி 4 நாட்கள் நடைபெறும் என்றுபேரவைத் தலைவர் பி.தனபால் அறிவித்துள்ளார்.
தமிழக அரசின் 2020-21-ம்நிதியாண்டுக்கான பட் ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீ்ர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று காலை தாக்கல் செய்தார்.
பிற்பகல் 1.15 மணிக்கு பட்ஜெட் அறிக்கை வாசித்து முடித்த உடன், பேரவை மீண்டும் திங்கள்கிழமை (பிப்.17) காலை 10 மணிக்கு கூடும் என்று பேரவைத்தலைவர் பி.தனபால்அறிவித்தார்.
அதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூடியது.
இதில், முதல்வர் பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பேரவைதுணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மூத்த அமைச்சர்கள், அரசு கொறடாதாமரை எஸ்.ராஜேந்திரன், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர்துரைமுருகன், கொறடா சக்கரபாணி, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, கொறடா விஜயதரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்ட முடிவில், பேரவை நிகழ்வுகள் குறித்து பேரவைத் தலைவர் பி.தனபால் கூறியதாவது:
பிப்.17-ம் தேதி (திங்கள்கிழமை) காலை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு தொடர்பாக இரங்கல் குறிப்புகள் வாசிக்கப்படும். அதைத் தொடர்ந்து நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் தொடங்கி வைக்கப்படும்.
பிப்.20-ம் தேதி நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு துணை முதல்வர் பதிலுரை வழங்குவார். அன்று, அரசின் சட்ட முன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறை வேற்றப்படும்.
இவ்வாறு அவர் தெரி வித்தார்.