தமிழகம்

சீர்காழி அருகே போலி மதுபான ஆலை நடத்தியவர் கைது: 1,056 மது பாட்டில்கள் பறிமுதல்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகேயுள்ள இளைய மதுக்கூடம் கிராமத்தில் போலி மது பாட்டில்கள் தயார் செய் யப்படுவதாக கிடைத்த தகவலை யடுத்து, மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, துணைக் காவல் கண்காணிப்பாளர் மாணிக்கவேல் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நேற்று அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, மேலவெளி பகுதி யில் கல்யாணசுந்தரம் மகன் செந்தில்(45) வீட்டின் கொல்லைப் புறத்தில் போலி மதுபான ஆலை செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அங்கிருந்த 1,056 குவார்ட் டர் போலி மது பாட்டில்கள் மற்றும் 200 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை போலீஸார் பறி முதல் செய்தனர். மேலும், 3000-க் கும் மேற்பட்ட காலி பாட்டில்கள், மூடி, ஸ்டிக்கர், சீல் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகிய வற்றையும் போலீஸார் கைப் பற்றினர்.

செந்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த காரைக்காலைச் சேர்ந்த ராஜேந் திரன், பாண்டியன் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT