கத்தரி வெயில் இன்று தொடங்கு கிறது. 28ம் தேதி வரை நீடிக்கும் இந்த கத்தரி வெயிலின்போது தமிழகத்தின் அனைத்து மாவட் டங்களிலும் வெயிலின் உக்கிரம் கடுமையாக இருக்கும்.
தமிழகத்தில் இது வரை 104 முதல் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் அதிகரித்துள்ளது. கத்திரி வெயிலின்போது இது 113 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், கத்தரி வெயில் தொடங்கும் நேரத்தில், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது தமிழகத்துக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.
இது வெயிலின் தாக்கத்தை சற்று தணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே கன்னியா குமரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.