தமிழகம்

சென்னையில் தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்வு

செய்திப்பிரிவு

சென்னையில் தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 112-க்குவிற்பனை ஆனது.

சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை, பங்குச்சந்தை ஆகியவற்றால் உள்ளூரில் தங்கம் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென உயர்ந்து காணப்பட்டது.

சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில்பவுனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.31 ஆயிரத்து 112-க்கு விற்கப்பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 889-க்கு விற்கப்பட்டது.

இதுவே, நேற்று முன்தினம் ரூ.3 ஆயிரத்து 862-க்கு விற்கப்பட்டது. கடந்த 10 நாட்களாக தங்கம் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இருப்பினும், அதிகமாக விலை ஏற்றமே இருப்பதால், நகை வாங்குவோரின் எண்ணிக்கை சுமார் 20 சதவீதம் குறைந்து விற்பனையும் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT