அயோத்தியில் கோயில் கட்டுவதற்காக தங்கத்தால் ஆன ஒரு செங்கல்தாம்பரத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த நவ. 9-ம் தேதி உச்ச நீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கோயில் கட்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் அயோத்தியில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு கோயில் கட்ட தங்கச் செங்கல்அனுப்பும் விழா பாரத சனாதன தர்மசேவா அறக்கட்டளை சார்பாககோவை ராம்நகர் பகுதியில் கடந்த நவ. 29-ம் தேதி நடைபெற்றது. இந்தசெங்கலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
இதற்கிடையே தாம்பரம் சானடோரியத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோயிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்ததங்கச் செங்கல் கொண்டு வரப்பட்டது. அங்கு ராம ஆஞ்சநேயர் சந்நிதியில் தங்கச் செங்கல் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் இலங்கை, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன், இந்து இளைஞர் எழுச்சி பேரவைத் தலைவர் பழ.சந்தோஷ் குமார் மற்றும் ராம ஆஞ்சநேயர் கோயில் நிர்வாகிகள் ராஜகோபாலன், அரவிந்தன், நாகராஜன், தலசாயனன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
இந்த தங்கச் செங்கல் பல்வேறு கோயில்களில் பூஜை செய்யப்பட்டு ராமர் கோயில் கட்டப்படும் அன்று வழங்கப்படவுள்ளது. அயோத்திக்கு எடுத்துச் செல்லப்படும் இதில் ‘ஸ்ரீராம்’ என்றவாசகம் பொறிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.