சென்னையில் வெங்காய விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமைக் கடைகளுக்கு கூடுதல் வெங்காயத்தை கொள்முதல் செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தியாவில் வெங்காயம் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் பருவம் தவறி பெய்த மழையால் அதன் விளைச்சல் குறைந்தது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெங்காய வரத்து குறைந்து அதன் விலை அதிகரித்தது.
நேற்றைய (புதன்கிழமை) நிலவரப் படி கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.70 ஆகவும், சில்லறை மார்க்கெட்டான ஜாம்பஜாரில் முதல் தர வெங்காயம் கிலோ ரூ.100 ஆகவும் விலை உயர்ந்துள்ளது. வியாசர்பாடி பகுதியில் 3-ம் தர வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது. ஆனால் கூட்டுறவுத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.55-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெங்காய விலையை கட்டுப் படுத்தும் விதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து கூட்டுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “காய்கறி விலையை கட்டுப்படுத்தும் வகையில்தான் பண்ணை பசுமை கடைகள் தொடங் கப்பட்டன. வழக்கமாக மகாராஷ்டிர மாநிலம், லாஸல்கான் மார்க்கெட்டில் இருந்து பண்ணை பசுமை கடைகளுக் காக வாரந்தோறும் 25 டன் வெங் காயம் வாங்கப்படும். வெளி மார்க் கெட்டுகளில் விலை அதிகரிப்பதால், அதை கட்டுப்படுத்த வெங்காயத்தின் கொள்முதலை வாரத்துக்கு 50 டன்னாக உயர்த்த உள்ளோம். லாஸல் கான் மார்க்கெட் மட்டுமல்லாது ஆந்திர மாநிலம் கர்னூல், கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் மார்க்கெட்டுகளிலும் வெங்காயம் வாங்க திட்டமிட்டிருக் கிறோம்” என்றார்.