பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

கோயில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதைத் தடுக்க திடீர் சோதனை நடத்துக: அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஆர்.பாலசரவணக்குமார்

கோயில்களுக்கு வெளியே பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி பூஜைப்பொருட்கள் விற்பதைத் தடுக்க திடீர் சோதனைகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்தது. இதற்காக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன், ஆஷா அமர்வில் நேற்று (பிப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் குறைக்கும் வகையில் பல நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும், இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், இது தொடர்பாகப் பதிலளிக்க கூடுதல் அவகாசம் வேண்டும் என்றும் கேட்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "கோயில்கள், மசூதிகள், தேவாலாயங்களுக்கு வெளியே பூஜைப் பொருட்கள், பூக்களை விற்பவர்கள் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுகிறார்கள். அதைத் தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்த வேண்டும். கடற்கரையில் நடத்தப்படும் சில விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள் பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்" எனக்கூறி வழக்கை மார்ச் 3-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

தவறவிடாதீர்!

SCROLL FOR NEXT