தமிழகம்

சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் வருமான வரித்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய்யின் ஆடிட்டர் விளக்கம்: அன்புச்செழியன் ஆஜராகவில்லை

செய்திப்பிரிவு

நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப் பப்பட்ட நிலையில், அவரது ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி சில விளக்கங்களை தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படம் ரூ.180 கோடி செலவில் உருவானதாக அதன் தயாரிப்பாளர்களில் ஒரு வரான அர்ச்சனா அகோரம் சமூகவலைதளத்தில் தெரிவித்து இருந் தார்.

மேலும், இப்படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாகவும் செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து, ஏஜிஎஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் பண்ணை வீடு, நீலாங்கரை பனையூர் மற்றும் சாலிக்கிராமம் வீடுகள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் சென்னை மற்றும் மதுரை வீடுகள், அலுவலகங்கள் ஆகிய இடங்களில் வருமானவரித் துறை யினர் சோதனை நடத்தினர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கப் பகுதியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சென்னைக்கு அழைத்துவந்து வருமானவரித் துறை அதிகாரி கள் 2 நாட்களாக விசாரணை நடத்தினர். அன்புச்செழியன் வீட்டில் இருந்து பல கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் ஏராளமான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதுகுறித்து நடிகர் விஜய், பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனஅதிபர் கல்பாத்தி அகோரம் ஆகியோரிடம் நடத்திய விசாரணை யில், 3 பேரும் முரண்பட்ட தகவல்களை தெரிவித்ததாக கூறப் படுகிறது.

சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை ஆதாரங்கள், சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, நேரில் ஆஜராகும்படி நடிகர் விஜய் உட்பட 3 பேருக்கும் வருமானவரித் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இருவரும் வரவில்லை

அதன்படி, விஜய்யும் அன்புச் செழியனும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜர் ஆவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் வரவில்லை.

இந்நிலையில், நேற்று மாலை இருவரின் ஆடிட்டர்களும் வருமான வரித் துறை அதிகாரிகள் முன்பு ஆஜராகி, தங்கள் தரப்பு விவரங்களை பிரமாண பத்திரமாக அளித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களிடம் வருமானவரித் துறைஅதிகாரிகள் மேலும் சில தக வல்களை கேட்டுள்ளதாக கூறப் படுகிறது.

SCROLL FOR NEXT