தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தற்போது தமிழகம் மற்றும்அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று சுழற்சி ஏதும் இல்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெயில் அளவுகளின்படி, பகல் நேர வெப்பநிலையில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, தொண்டி ஆகிய பகுதிகளில் தலா 34 டிகிரி செல்சியல் வெயில் பதிவாகியுள்ளது.