கோப்புப் படம் 
தமிழகம்

8-ம் வகுப்பு தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

செய்திப்பிரிவு

தேர்வுத்துறை இயக்குநர் சி.உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

நடப்பு கல்வியாண்டில் நடைபெறவுள்ள 8-ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறியதனித்தேர்வர்கள் இறுதி வாய்ப்பாக தத்கால் திட்டத்தின்கீழ் இன்று (பிப்.10) முதல் 12-ம் தேதி வரை 3 நாட்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று பதிவுசெய்து கொள்ள வேண்டும்.

இதற்கான கட்டணமாக ரூ.675 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் போது பள்ளியில் பெற்ற அசல் மாற்றுச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் பயிலாதவர்கள் தங்கள் அசல் பிறப்பு சான்றிதழைசமர்ப்பிக்க வேண்டும். 8-ம் வகுப்பில் தோல்வியடைந்த குறிப்பிட்ட பாடத்தில் மட்டும் தேர்வெழுத விண்ணப்பிப்பவர்கள் ஏற்கெனவே உள்ள மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களை கண்டிப்பாக சமர்பிக்க வேண்டும்.கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் காணலாம்.

SCROLL FOR NEXT