டாக்டர் க.குழந்தைசாமி 
தமிழகம்

சீனர்கள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்: 42 பேரை பரிசோதித்ததில் யாருக்கும் கரோனா பாதிப்பு இல்லை - பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் க.குழந்தைசாமி தகவல்

செய்திப்பிரிவு

சீனாவில் இருந்து தமிழகம் வந்த 42 பேரை பரிசோதனை செய்ததில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த சீனர்கள் அனை வரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காய்ச்சல் சீனாவைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் இதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப் பட்டுள்ள நிலையில், காய்ச்சலின் தீவிரத்தால் 800-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இருந்து கேரளா வந்த 3 பேருக்கு இந்த வைரஸ் இருப்பது உறுதி செய்யப் பட்டது.

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவி இருப்பதால் மத்திய, மாநில அரசுகள், விமான நிலையங்களில் தடுப்பு நடவடிக்கை களை தீவிரப்படுத்தின.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் உள்ள மருத் துவக் குழுவினர், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு (சீனா உள்ளிட்ட வெளிநாடு களில் இருந்து) வருபவர் களுக்கு மருத்துவப் பரி சோதனை செய்கிறார்கள்.

இதுவரை தமிழகம் வந்த 24,401 பேரை பரி சோதனை செய்ததில், 1,856 பேர் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். இதில், சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்ட 8 சீனர்கள் மற்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்த 2 சீனர்கள் உள்ளிட்ட அனைவரும் மருத்துவமனை களில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மருத்துவ மாணவி ஒரு வரும், திருச்சி அரசு மருத்துவமனையில் ஒருவரும் கண் காணிப்பில் உள்ளனர்.

இதுதொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத் துவத் துறை (டிபிஎச்) இயக் குநர் டாக்டர் க.குழந்தை சாமி கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அனைத்து நடவடிக்கை களும் எடுக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் தனியாக சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் இருந்த 10 சீனர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது பரி சோதனையில் உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதுவரை 42 பேரின் ரத்த மாதிரிகள் எடுக் கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டன. பரி சோதனை முடிவில் யாருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று தெரியவந் துள்ளது. சீனாவில் இருந்து தமிழகம் வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டது.

பொதுமக்கள் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவ வேண்டும். ஒவ் வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 விநாடிகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இருமும் போதும், தும்மும்போதும் முகத்தை கைக்குட்டை கொண்டு மூடிக் கொள்ள வேண்டும்.

தூய்மை அவசியம்

கைகளை கழுவாமல் மூக்கு, வாய் மற்றும் கண்களைத் தொடக்கூடாது. காய்ச்சல், இருமல், தும்மல் இருப்பவர்களிடம் இருந்து சிறிது தூரம் இடைவெளிவிட்டு இருக்க வேண்டும். கைகள் படும் இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அசைவ உணவு உண்பவர்கள், அவற்றை நன்கு வேகவைத்த பின்னர் சாப்பிட வேண்டும். கரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு பயணம் செல்வதைத் தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT