தமிழகம்

மானம், வெட்கம், ரோசம் மனதில் இருக்க வேண்டும்: சுங்கச் சாவடி ஊழியர்களுக்கு அமைச்சர் உதயகுமார்  ‘அட்வைஸ்’

செய்திப்பிரிவு

வாக்காளர்கள் எவ்வளவு திட்டினாலும் மானம், வெட்கம், ரோசத்தை மனதுக்குள் வைத்துக் கொண்டு ஓட்டுக் கேட்பதைப் போல சுங்கச்சாவடி ஊழியர்களும் செயல்பட வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கப்பலூர் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் உதயகுமார் இந்தச் சுங்கச்சாவடியில் ஏற்படும் பிரச்சினையால் தனக்கு ஓட்டு குறைகிறது என்றார்.

வாகன ஓட்டிகளிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் வாக்காளர்கள் எவ்வளவு வைதாலும் திட்டினாலும் ஓட்டுக் கேட்பதைப் போல மானம், ரோசம், வெட்கத்தை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அமைச்சர் உதயகுமார் கூறினார்.

ஒரு குழந்தைக்கு தாய் உணவு ஊட்டுவதைப் போல் இருக்க வேண்டும், சித்தி உணவு ஊட்டுவதைப் போல் இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

“நீங்க ஒரு ஓட்டு போடறதுக்கு நாங்க என்ன பாடுபடறோம் தெரியுமா? ஓட்டுப் போட்டால் போடுங்கள் போடா விட்டால் வஎன்று சொன்னால் போதும் அப்டியே வாட்ஸ் அப்பில் எடுத்து போடறாங்க அமைச்சர் கொந்தளித்தார், கோபப்பட்டார் என்றெல்லாம் உடனே செய்திகள் வரும் அதனால்தான் சொல்றேன் மானம், வெட்கம், ரோசம் மனதில் இருக்க வேண்டும் என்று” என்று அமைச்சர் உதயகுமார் நகைச்சுவையாகப் பேசினார்.

SCROLL FOR NEXT