சேலம் வாழப்பாடியில் 13 ஏக்கர் நிலப்பரப்பில் கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார், இதில் முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீநிவாசன், முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் திராவிட் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் பிசிசிஐ முன்னாள் தலைவர் ஸ்ரீநிவாசன் பேசும் போது, “எனக்கு நினைவில் தெரிந்தவரி கிரிக்கெட் மைதானம் ஒன்றை திறந்து வைத்த முதல் முதலமைச்சர் நீங்கள்தான் என்று கருதுகிறேன். யாரும் இதுக்கு முன்னால பண்ணினதே இல்லை.
இங்கு தமிழ்நாடு பிரிமியர் லீக் டி20 போட்டிகளை இங்கு நடத்துவோம். மேலும் மகேந்திர சிங் தோனி மற்றும் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஆகியோரை இந்த மைதானத்தைப் பார்வையிட அழைக்கவுள்ளேன்.
இந்த மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளும் நடக்கும் என்பதை உங்களுக்கு வாக்குறுதியாக அளிக்கிறேன். தோனி இங்கு அணியை வழிநடத்தி விளையாடுவார். நீங்கள் முதல்வராக இருக்கும் போதே நடக்கும், நீங்கள் அந்தப் போட்டிக்கு வருகை தரவேண்டும்” என்று ஸ்ரீநிவாசன் பேசினார்.