தமிழகம்

கேங்மேன் தேர்வில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை: மின்துறை அமைச்சர் தங்கமணி விளக்கம்

செய்திப்பிரிவு

கேங்மேன் தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தமிழ்நாடு மின்வாரிய பொறியாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கேங்மேன் தேர்வில் 90 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இத்தேர்வில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை. இத்தேர்வு நடைமுறை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

முறைகேடுகள் எதுவும் நடக்கவில்லை. நீதிமன்றத்தில் வீடியோபதிவை அளிக்கவும் தயாராகஉள்ளோம். தேர்வு ஒளிவுமறைவின்றி நடந்துள்ளது. பூரண மதுவிலக்கு தான் அரசின் கொள்கை. மதுக்கடைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகின்றன. மது பானங்களை பிளாக்கில் விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SCROLL FOR NEXT