தமிழகம்

3 நாட்களுக்கு மழை வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வுமைய அதிகாரிகள் கூறியதாவது:

தென் தமிழகம் முதல், மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி வரை, கர்நாடகத்தின் உள் பகுதி வழியாக காற்று சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத் துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை அளவுகளின்படி, பகல்நேர வெப்பநிலையில் அதிக அளவாக மதுரை தெற்கில் 35 டிகிரி, நாமக்கல், கரூர் பரமத்தி,மதுரை விமான நிலையம், பாளையங்கோட்டை ஆகிய இடங்களில் தலா 34 டிகிரி செல்சியஸ் வெயில் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT