புதிய கல்விக்கொள்கையை திரும்ப்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்துள்ளார்.
மத்திய அரசு தயாரித்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாலும், அக்கொள்கையை ஏற்க மறுத்து இருப்பதாலும் புதியக் கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் திட்டம் மத்திய அரசுக்கு உண்டா? என்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பாமக உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால், புதிய கல்விக் கொள்கையை திரும்பப்பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறினார். ‘‘வரைவு தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கருத்துரைகளும், யோசனைகளும் வந்துள்ளன.
புதிய கல்விக் கொள்கைக்கு நல்ல விளம்பரம் கிடைத்திருப்பதுடன், அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் சாதகமான கருத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் அடிப்படையில் புதிய தேசிய கல்விக் கொள்கையை இறுதி செய்யும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது என்று அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் தெரிவித்தார்.
தவறவிடாதீர்!