விருதுநகரில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியைக் கண்டித்து சட்டவிரோதமாக ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 75 பெண்கள் உள்ப 300 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முஸ்லிம்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், சட்டவிரோமாக ஒன்றுகூடி பொதுமக்கள் பாதையை மறித்தும் காவல்துறை கலைந்துபோகச் செல்லியும் கலைந்து போகாமல் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்தியதாக தமுமுக மாவட்டத் தலைவர் முகமது இப்ராகிம், மாவட்ட பொருளாளர் அப்துல் அன்வர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட செயலர் அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட 300 பேர் மீது விருதுநகர் மேற்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், சாத்தூரில், ”கே.டி.ராஜேந்திரபாலாஜியின் அமைச்சர் பொறுப்பைப் பறித்து நடவடிக்கை எடு” என சுவரொட்டி ஒட்டியதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் முகமது சபீக், செயலர் சிந்தாஷா ஆகியோர் மீது சாத்தர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
ராஜபாளையத்தில் சுவரொட்டி ஒட்டியதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி அமைப்பினர் மீது ராஜபாளையம் வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.