தமிழகம்

கடையடைப்பில் பங்கேற்க இயலாது: விக்கிரமராஜா அறிவிப்பு

செய்திப்பிரிவு

முழு கடையடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இயலாது என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தக் கோரி 4-ம் தேதி (நாளை) முழு கடையடைப்பு போராட்டத்துக்கு சில அரசியல் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தன. சில நாட்களுக்கு முன்பு தான் மாமனிதர் அப்துல் கலாம் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கடைகள் அடைக்கப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் மீண்டும் கடையடைப்பு என்பது வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த தொல்லை ஏற்படுத்தும். இதனால், அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்க இயலாது. எனவே, நாளை தமிழகத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் வழக்கம்போல செயல்படும்.

அதேநேரத்தில் சமூகத்தில் ஏற்படும் சீர்கேடுகளை கவனத்தில் கொண்டு தமிழக அரசு முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT