தமிழகம்

ஜெயலலிதா உருவப்படம் எரித்த 5 பேர் கைது

செய்திப்பிரிவு

சத்தியமூர்த்தி பவனில் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை எரித்த 5 பேர் கைது செய்யப் பட்டனர்.

முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாகக் கூறி காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிராக அதிமுகவினர் கடந்த மூன்று நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரித்தனர். இது தொடர்பாக அண்ணாசாலை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்ட துணைத்தலைவர் அசோக்குமார், பொதுச்செயலாளர் ரகுமான், மயிலாப்பூர் தொகுதி தலைவர் முரளிதரன், துணைத்தலைவர் பாலு, ராயப்பேட்டை 114-வது வட்ட செயலாளர் தணிகைவேல் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT