தமிழகம்

ஒரே நாளில் 5 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 5 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன.

மானாமதுரை அருகே ஆலம்பச்சேரி கிராமத்தில் 17 வயது சிறுமிக்கு நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. அதேபோல, சிவகங்கை அருகே கீழச்சாலூரில் 17 வயது சிறுமிகள் 2 பேருக்கும், நாமனூரில் பதினைந்து வயது சிறுமிக்கும், தமறாக்கி வடக்கு கிராமத்தில் 17 வயது சிறுமிக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இதுகுறித்து மாவட்ட சைல்டுலைன் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

சைல்டு லைன் இயக்குநர் ஜீவானந்தம் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தபாபு, துணை மையத் தலைவர் ராஜேஷ், ஆலோசகர்கள் ஜூலியட் வனிதா, கார்த்திகேயன், ராமர், சுகன்யா, சாந்தி ஆகியோர் போலீஸாரின் உதவியோடு சென்று 5 குழந்தைத் திருமணங்களையும் தடுத்து நிறுத்தினர். சிறுமிகளின் பெற்றோர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இதில் 3 பேர் பள்ளிகளில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. இச்சிறுமிகள் கல்வியைதொடர நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT