டெல்லியில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மையத்தில் (ஐஐஐடிஇஎம்) மறைந்த முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் பெயரில் அமைய உள்ள ஆய்வு இருக்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி, தேர்தல் ஆணைய இயக்குநர் ஜெனரல் உமேஷ் சின்ஹா, ஐஐஐடிஇஎம் இயக்குநர் ஜெனரல் தர்மேந்திர சர்மா, இயக்குநர் மோனா சீனிவாஸ் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
தமிழகம்

தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மையத்தில் சேஷன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க நடவடிக்கை

செய்திப்பிரிவு

டெல்லியில் உள்ள தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மையத்தில், டி.என்.சேஷன் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். தமிழகத்தைச் சேர்ந்த இவர் சமீபத்தில் மறைந்தார். சேஷனின் நினைவைப் போற்றும் வகையில், அவர் பெயரில் தேர்தல் தொடர்பான பல்துறை அணுகுமுறையுடன் கூடிய ஆய்வு இருக்கையை டெல்லியில் உள்ள ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மைக்கான இந்திய சர்வதேச மையத்தில் (ஐஐஐடிஇஎம்) நிறுவ இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இந்த ஆய்வு இருக்கைக்கான தலைவராக, இந்திய தேர்தல் ஆணைய முன்னாள் தலைமை ஆணையரான என்.கோபால்சாமியை நியமித்துள்ளது. 2020-2025-ம் ஆண்டுக்கு இந்த ஆய்விருக்கைக்கான ஆய்வு பாடத்திட்டத்தை தயாரிக்க கூறியுள்ளது.

இதையடுத்து, நேற்று சென்னையில் இதுதொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஆய்விருக்கையின் தலைவரான என்.கோபால்சாமி, தேர்தல் ஆணைய இயக்குநர் ஜெனரல் உமேஷ் சின்ஹா, ஐஐஐடிஇஎம் இயக்குநர் ஜெனரல் தர்மேந்திர சர்மா, இயக்குநர் மோனா சீனிவாஸ் மற்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், டி.என்.சேஷன் ஆய்விருக்கை தொடர்பான வரைவு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT