தமிழகம்

பழநி சண்முகநதியில் 24 அடி உயர பிரம்மாண்ட வேல் பிரதிஷ்டை

பி.டி.ரவிச்சந்திரன்

பழநி சண்முகநதியில் 24 அடி உயர வேல் ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநியிலுள்ள சண்முகநதி புனிதநதியா கருதப்படுகிறது. பழநிக்கும் செல்லும் பக்தர்கள் சண்முகநதியில் நீராடிவிட்டு பின்னர் மலைக்கோயில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

சண்முகநதி முறையான பராமரிப்பு இன்றி பாதுகாக்கப்படாத நிலையில் சில மாதங்களுக்கு முன்பு சண்முகநதி தூய்மை மற்றும் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் சமூக ஆர்வலர்கள், பக்தர்கள் ஒன்றிணைந்து சண்முகநதியை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து மாதந்தோறும் சண்முகநதியில் ஆரத்திவழிபாடு நடத்தினர். சண்முகநதியை தொடர்ந்து பராமரிக்கவும், பாதுகாக்கவும் ஆரத்திவழிபாட்டை தொடர உள்ளனர்.

இதற்காக 24 அடி உயரத்தில் பிரமாண்ட வேல் ஒன்று சண்முகநதியில் நிறுவப்பட்டுள்ளது. நான்கு லட்சம் ரூபாய் மதிப்பில் ஐம்பொன்னால் செய்யப்பட்ட வேல் சண்முகநதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

ஆற்றின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பிராமண்ட வேல் பக்தர்களை பரவசப்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT