தஞ்சாவூர் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கோயிலையொட்டிய பகுதிகளில் உள்ள சுவர்களில் கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய ஓவியங் களை வரைந்துள்ளனர்.
தஞ்சாவூர் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, கோயிலை சுற்றியுள்ள அரசுக்குச் சொந்தமான சுவர்களில், கும்ப கோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் பாரம்பரிய ஓவியங்களை வரைந்துள்ளனர்.
குறிப்பாக, பொன்னியின் செல்வன் நாவலைக் காட்சிப்படுத்தக் கூடிய ஓவியங்கள், 108 சிவ தாண்டவம், மாமன்னன் ராஜராஜ சோழனின் கம்பீரத் தோற்றம், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகள், தலையாட்டி பொம்மை உட்பட 170-க்கும் அதிகமான ஓவியங்களை கடந்த ஒரு மாதமாக இரவு பகலாக தீட்டியுள்ளனர். இந்த ஓவியங்கள் தஞ்சாவூர் மக்களையும், அங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளையும் வெகுவாக கவர்ந் துள்ளன. குடமுழுக்கு விழா முடிந்த பிறகு, இவற்றின் மீது சுவரொட்டிகள் ஒட்டாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவின் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஓவியம் வரையும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவி பிரியா(19) கூறியதாவது: நாங்கள் வரைந்துள்ள பாரம்பரிய ஓவியங்களை பார்த்து பலரும் பாராட்டுகின்றனர். இது எங்களது ஒரு மாத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. குடமுழுக்கு விழா முடிவ டைந்த பிறகு, இந்த ஓவியங்கள் மீது சுவரொட்டிகள் ஒட்டாமல் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.