தமிழகம்

முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை தமிழக அமைச்சரவை கூட்டம்: பட்ஜெட் குறித்து முக்கிய ஆலோசனை

செய்திப்பிரிவு

தமிழக அமைச்சரவை கூட்டம்முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை நடக்கிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவது குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட், இம்மாத இறுதியில் அல்லதுமார்ச் முதல் வாரத்தில் தாக்கல்செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

இந்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் நாளை காலை10.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் நடக்கிறது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில், முதல்வர் பழனிசாமி லண்டன் சென்றிருந்தபோது, அங்குள்ள பிரபல கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த மருத்துவமனையை தமிழகத்தில் விரைவில்தொடங்குவது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

கரோனா வைரஸ் தடுப்பு..

மேலும், சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடரை எப்போது கூட்டுவது என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட்டில்துறைகள் வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்குவது, பழைய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது, பல நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிப்பது குறித்து முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.

அத்துடன் தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கான நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்
துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

SCROLL FOR NEXT