முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் இயக்குநர் பேரரசு தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார். 
தமிழகம்

திரைப்பட இயக்குநர் பேரரசு பாஜகவில் இணைந்தார்

செய்திப்பிரிவு

திரைப்பட இயக்குநர் பேரரசு,முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

விஜய் நடித்த ‘திருப்பாச்சி’, ‘சிவகாசி’, அஜித் நடித்த ‘திருப்பதி’, விஜயகாந்த் நடித்த ‘தருமபுரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் பேரரசு. இயக்குநர் சங்க பொருளாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்றுதமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பேரரசு, தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய பணிகளால் ஈர்க்கப்பட்டதால் பாஜகவில் இணைந்ததாக பேரரசு தெரிவித்தார். அவருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கிய பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமரின் உன்னதத் திட்டத்தை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் சிறப்பாக பணியாற்றுமாறு வாழ்த்தினார்.

SCROLL FOR NEXT