ஆந்திர மாநிலத்தில் கணவனால் வெட்டி துண்டிக்கப்பட்ட பெண்ணின் கையை உடலுடன் இணைத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக அம்மருத்துவ மனை முதல்வர் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ் நேற்று நிருபர்களிடம் கூறிய தாவது:
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இந்து பள்ளி ராஜேஸ்வரி. கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி ஏற்பட்ட தகாராறில் ராஜேஸ்வரியின் கணவர் அவரது கையை அரிவாளால் வெட்டி னார். இதில் ராஜேஸ்வரியின் கை, மணிக் கட்டு பகுதியிலிருந்து துண்டானது. உடனே அருகில் உள்ள மருத்துவமனை யில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அங்குள்ள மருத்துவர்கள், துண்டான கையுடன் அப்பெண்ணை ஸ்டான்லி மருத்துவமனைக்கு 18-ம் தேதி அனுப்பி வைத்தனர். இங்கு 6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்கு பின் அவரது கை வெற்றி கரமாக உடலுடன் இணைக்கப்பட்டது. கை துண்டாக்கப்பட்டு பல மணி நேரங்களுக்கு பிறகு இணைக்கப்படும் அறுவை சிகிச்சை மிக அரிதாகவே செய்யப்படுகிறது.
அப்பெண் தற்போது நலமாக உள்ளார். கை விரல்களை அவரால் அசைக்க முடிகிறது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனை களில் செய்ய ரூ.20 லட்சம் செலவாகும். இங்கு இலவசமாக செய்யப்பட்டுள் ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது நிலைய மருத்துவர் எம்.ரமேஷ், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறைத் தலைவர் ரமாதேவி, மயக்கவியல் துறை மருத்துவர் லதா உடனிருந்தார்.