விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் விழாவில் தேர், தலித் வீடுகளை எரித்து வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக உண் மைக் குற்றவாளிகளை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாலி பகுதியில் மதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, திராவிட இயக்க நூற் றாண்டு விழா மாநாடு நடைபெற வுள்ளது. மாநாட்டுப் பணிகளை வைகோ நேற்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம் சங்கராபு ரம் வட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்ப தோடு, மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள தலித் மக்கள் வசிக்கும் பகுதி யில் உள்ள மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 14-ம் தேதி தொடங்கியுள்ளது. 15-ம் தேதி தேரோட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதில் தேர் முற்றிலும் எரிந்து சேதமா னது. மின் இணைப்பு துண்டிக் கப்பட்டதுடன், தலித் மக்கள் சிலரது வீடுகளும் எரிக் கப்பட்டதாக செய்திகள் வந்துள் ளன. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்களுக்கு, எந்தவித தொந்தர வையும் காவல்துறை யினர் அளிக்கக்கூடாது.
மதுவுக்கு எதிராக பெண் கள் உட்பட அனைத்துத் தரப்பி னரும் போராடும் சூழலில், தமிழ கத்தில் கசப்புணர்வு வளராமல் இருக்க அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.