தமிழகம்

இண்டேன் காஸ் சிலிண்டருக்கு மின்னணு முறையில் கட்டணம்- வாடிக்கையாளர்களுக்கு ஐஓசி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

இண்டேன் வாடிக்கையாளர்கள் சிலிண்டருக்கான கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாடிக்கையாளர்கள் இண்டேன் சிலிண்டருக்குரிய சரியான விலையை மின்னணு முறையில் செலுத்தலாம். போன் மூலம் சிலிண்டர் பெற புக்கிங் செய்தவுடன் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கு வரும் குறுந்தகவலில் ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்.

இந்த லிங்க் ஒரு நாளைக்கு மட்டுமே திறந்திருக்கும். அந்த லிங்க்கில் சென்று சிலிண்டருக்கான தொகையைநெட் பாங்கிங், கிரெடிட், டெபிட்கார்டுகள், இ-வாலட் ஆகியவை மூலம் செலுத்தலாம். இந்த வழியில் சிலிண்டர் டெலிவரிக்கு பின் வாடிக்கையாளர்கள் எந்த விதமான கட்டணத்தையும் செலுத்த வேண்டாம்.

மற்றொரு வழியாக, டெலிவரி பணியாளர் சிலிண்டரை ஒப்படைக்கும்போது டிஜிட்டல் பேமென்ட் பெறும்படி வலியுறுத்தலாம். அவரை பணம் செலுத்தும் கருவியை (mPOS) கொண்டுவரு மாறு கூறி அந்த கருவி மூலம்பணம் செலுத்தலாம். பெரும்பாலும் ரொக்கமாக செலுத்துவதை தவிர்த்துவிடவும்.

இண்டேன் விநியோகஸ்தர்கள் சிலிண்டரை டெலிவரி செய்த பிறகு, வழங்கும் கேஷ் மெமோவில் குறிப்பிடப்பட்டுள்ள சில்லறை விற்பனை விலை சிலிண்டருக்கான ஒப்படைப்பு கட்டணத்தை உள்ளடக்கியது. எனவே டெலிவரி செய்பவருக்கு 'டிப்ஸ்' கொடுப்பதை இந்தியன் ஆயில் ஆதரிக்கவில்லை.

மேலும் விவரங்களுக்கு சென்னையில் 044-24339235 / 24339236 ஆகிய எண்களில் காலை 9:30 முதல் மாலை 5:15 வரை தொடர்புகொள்ளலாம். அவசர சேவைக்கு 1906 என்ற எண்ணில் 24 மணி நேரமும் அணுகலாம். புகார்களுக்கு 1800-2333-555 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளளாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT