தமிழகம்

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளில் அதிமுக அதிக இடங்களில் வெற்றி- துணைத் தலைவர் பதவிகளில் திமுக ஆதிக்கம்

செய்திப்பிரிவு

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி களில் அதிமுகவும், துணைத் தலைவர் பதவிகளில் திமுகவும் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த 11-ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. அப்போது பல்வேறு காரணங்களுக்காக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட இடங்களுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

26 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் 14 இடங்களுக்கு மட்டுமே நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 7, பாமக 2, திமுக 4, சுயேச்சை 1 இடங்களில் வெற்றி பெற்றனர். 12 இடங்களில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

41 ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் பதவிகளில் 22 இடங்களுக்கு மட்டுமே நேற்று தேர்தல் நடைபெற்றது. அதில் திமுக 10, காங்கிரஸ் 1, மதிமுக 1, அதிமுக 5, பாமக 1, சுயேச்சைகள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT