காந்தியடிகளின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று பகல் 11 மணி அளவில் சென்னை கடற்கரை சாலை, காந்தி சிலை அருகே உள்ள சிக்னலில் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. படம்: க.பரத் 
தமிழகம்

காந்தியின் நினைவை போற்றும் வகையில் போக்குவரத்து போலீஸார் சார்பில் சிக்னல்களில் 2 நிமிட அஞ்சலி

செய்திப்பிரிவு

மகாத்மா காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் போக்குவரத்து போலீஸார் சார்பில் சிக்னல்களில் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் 73-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காந்தியின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை போக்குவரத்து போலீஸார் சார்பில் நேற்று காலை 11 மணி அளவில் அனைத்து சிக்னல்களிலும் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக 11 மணி முதல் 11.02 மணி வரை சென்னையில் உள்ள சிக்னல்களில் போக்குவரத்து 2 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. அப்போது வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை நிறுத்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலை சிக்னலில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் வேப்பேரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் டி.பி.டேனியல் ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT