தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு காலை நேரத்தில் பனிப்பொழிவு நீடிக்க வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக மார்கழி மாதத்தில் காலை நேரத்தில் குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை ஜனவரியிலும் நீடித்ததால் பொங்கல் பண்டிகை வரை காலை நேரத்தில் குளிர் இல்லை. அதன் பிறகு தற்போது குளிர் நிலவி வருகிறது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும். காலை நேரத்தில் பனிப்பொழிவு நிலவக்கூடும். புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி, மலைப் பகுதிகளான உதகமண்டலத்தில் 7.5 டிகிரி, வால்பாறையில் 9.5 டிகிரி, குன்னூரில் 11 டிகிரி, கொடைக்கானலில் 12.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. நிலப்பகுதியான தருமபுரியில் 17.5 டிகிரி, திருத்தணியில் 19.5 டிகிரி, வேலூரில் 19.8 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.