தியாகிகளுக்கான ஓய்வூதியம், ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.11 ஆயிரமாக உயர்த்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித் தார்.
சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து முதல்வர் ஜெயலலிதா உரையாற் றினார். அவர் பேசியதாவது:
நாட்டின் விடுதலைக்காக உரிமைக்குரல் எழுப்பி, நாளெல் லாம் சிறை கண்டு, அடிபட்டு, மிதிபட்டு, மாண்டுபோன பெயர் தெரியாத ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட தியாகிகள், எண்ணற்ற வீரர்களை நெஞ்சில் நினைத்து போற்றவும் அவர்களின் தியாகங்களை நினைவுகூரவும் சுதந்திர தினத்தை நாம் கொண்டாடுகிறோம்.
அனைவருக்கும் தேவையான வாழ்வாதாரமும் சமூக ரீதியில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாத நிலை யுமே உண்மையான சுதந்திரம். தமிழகம் அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறும் நடவடிக்கைகளை கடந்த 4 ஆண்டுகளாக இந்த அரசு எடுத்து வருகிறது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனைவருக் கும் கட்டணமில்லா கல்வி, சீருடைகள், உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இலவச மிதிவண்டிகள், மடிக்கணினிகள் மற்றும் இடை நிற்றலை தவிர்க்க 10-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
சுகாதாரம், இலவச திட்டம்
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், மகப்பேறு உதவி, இலவச சானிடரி நாப்கின் என பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. ஏழை மக்களுக்காக இலவச அரிசி, தாலிக்கு தங்கத்துடன் ரூ.50 ஆயிரம் திருமண உதவி திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் சுமார் 6 லட்சம் பெண்களுக்கு ரூ.1,948 கோடி நிதியுதவியும் 2,154 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பெண்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, ஆதரவற்றோருக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம், இலவச கறவை பசுக்கள், வெள்ளாடுகள், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகங்கள் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ரூ.1 லட்சம் கோடி முதலீடு
மின் வெட்டு என்ற பேச்சுக்கே இட மில்லாத வகையில் மின் உற்பத்தி பெருக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் நடக்கும் உலக முதலீட்டா ளர்கள் மாநாட்டில் ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலான முதலீடுகள் கிடைக்கும். மொத்தத்தில் நான் காண்டு ஆட்சியில் நாலாபுறமும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. துறை தோறும் ஒளிவெள்ளம் ஏற்பட்டுள் ளது.
ஓய்வூதியம் அதிகரிப்பு
சுதந்திரப் போராட்ட வீரர்களை கவுரவிக்கும் வகையில் அவர் களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ.10 ஆயிரத் தில் இருந்து ரூ.11 ஆயிரமாகவும் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடும்ப ஓய்வூதியம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.5,500 ஆகவும் உயர்த்தப்படும். இதன் மூலம் 1,881 பேர் பயனடைவர்.
இதுதவிர விடுதலைப் போராட் டத்தில் பங்கு பெற்ற வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோ தரர்கள், முத்துராமலிங்க விஜய ரகுநாத சேதுபதி ஆகியோரது வழித்தோன்றல்கள், வ.உ.சி.யின் பேரன் ஆகியோர் ரூ.4,500 சிறப்பு ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இந்த ஓய்வூதியம், இனி ரூ.5 ஆயிரமாக உயர்த்தப்படும். ‘ஒட்டு மொத்த வளர்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற லட்சியப் பாதையில் தொடர்ந்து நாங்கள் பயணிப்போம். இவ்வாறு முதல்வர் உரையாற்றினார்.