தமிழகம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் 71வது குடியரசு தினவிழா

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 71வது குடியரசு தினவிழா இன்று நடந்தது. அலுவலக வளாகம் முன்புறம் உள்ள மகாத்மா காந்தி உருவசிலைக்கு மாலை அணிவித்த பின்னர், விக்டோரியா கூட்ட அரங்கு முன்புறம் தேசியக் கொடியை ஆணையர் ஷரவன் குமார் ஜடாவத் ஏற்றினார்.

பின்னர், ஆர்.எஸ்.புரம், வடகோவை, ராமநாதபுரம் மாநகராட்சி பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. மாநகராட்சி நிர்வாகத்தில் 25 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகள் 12 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதியை ஆணையர் வழங்கினார்.

பின்னர், மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.இதில் , மாநகராட்சி துணை ஆணையர் ச.பிரசன்னா ராமசாமி, மண்டல உதவி ஆணையர்கள், பொறியியல் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT