தமிழகம்

மேகி நூடுல்ஸ் விளம்பர வழக்கில் விடுவிக்க கோரி அமிதாப்பச்சன் மனு

செய்திப்பிரிவு

தென்னிந்திய நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் தலைவர் கு.மணவாளன், மதுரையில் உள்ள மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மாநில நுகர்வோர் ஆணையக் கிளையின் நீதித்துறை உறுப்பினர்கள் ஏ.கே.அண்ணாமலை, எம்.முருகேசன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமிதாப்பச்சன் சார்பில் செய்யப்பட்ட பதில் மனு தாக்கல்:

மேகி நூடுல்ஸ் விளம்பரங்களில் 5.6.2012 முதல் 5.9.2013 வரை நடித் துள்ளேன். நான் இந்த விளம்பரத் தில் நடித்தபோது, நூடுல்ஸ் தரம் குறித்து புகார் எழவில்லை. மனுதாரர் தேவையில்லாமல் என்னை எதிர் மனுதாரராக சேர்த் துள்ளார். எனவே வழக்கில் இருந்து என்னை விடுவித்து உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

அமிதாப்பச்சன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் தருமாறு மனுதாரரின் வழக்கறிஞர் பிறவிப்பெருமாள் கேட்டுக்கொண் டார்.

அதையேற்று விசாரணையை செப். 9-ம் தேதிக்கு ஆணைய உறுப்பினர்கள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT