தமிழகம்

ஓணம் பண்டிகைக்காக தோவாளையில் இருந்து கேரளத்துக்கு 3 லட்சம் கிலோ மலர்கள் சப்ளை - ஒரே நாளில் 70 டன் பூக்கள் விற்பனை

எஸ்.மோகன்

ஓணம் கொண்டாட்டத்துக்காக தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரள வியாபாரிகளால் 3 லட்சம் கிலோ மலர்கள் கொள் முதல் செய்யப்பட்டுள்ளன. சிறப்பு விற்பனை நடைபெற்ற ஒரே நாளில் 70 டன் பூக்கள் விற்பனையாயின.

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள மலர்ச்சந்தை முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. கேரளத்தில் நடைபெறும் பண்டிகைகள் மற்றும் விழாக்களுக்கு தோவாளை சந்தையில் இருந்து பூக்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இன்று ஓணம் கொண்டாடப்பட வுள்ள நிலையில் கடந்த 10 நாட் களும் அத்தப்பூ மற்றும் அரங்கு கள் அலங்காரம் போன்றவற்றுக் காக பூக்கள் விற்பனை களைகட்டி யிருந்தது.

சிறப்பு வியாபாரம்

ஓணம் சீஸனில் 5 லட்சம் கிலோ மலர்கள் விற்பனை செய்ய தோவாளை வியாபாரிகள் இலக்கு வைத்திருந்தனர். அதற்கேற்ப தொடக்கம் முதலே அத்தப்பூ கோலத்துக்கான கிரேந்தி, வாடா மல்லி, கோழிக்கொண்டை, செவ் வந்தி, தாமரை, ரோஜா போன்ற பூக்களை வாங்க கடும் போட்டி நிலவியது. கேரள வியாபாரிகள் நூற்றுக்கணக்கானோர் தோவாளை மலர் சந்தையில் முகாமிட்டு வாங்கிச்சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியில் இருந்து நேற்று மதியம் வரை சிறப்பு வியாபாரம் நடைபெற்றது. இரவு முழுவதும் விற்பனை என்பது தோவாளை மலர் சந்தையில் இந்த ஒரு நாளில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு வியாபாரத்தில் கொள் முதல் செய்வதற்காக வழக்கத்தை விட அதிகமான வியாபாரிகளும், பொதுமக்களும் கேரளத்தில் இருந்து வந்திருந்தனர். ஆயிரக் கணக்கானோர் கூடியதால் தோவாளை மலர் சந்தை களைகட் டியது.

லாரி லாரியாக..

மலர் சந்தை மொத்த வியாபாரி கள் கூறும்போது, ‘ஓணம் சீஸனில் சிறப்பு விற்பனை நடைபெறும் நாள்தான் தோவாளை மலர் வியாபாரிகளுக்கு மகிழ்ச்சியான நாள். அனைத்து வியாபாரிகளும் நல்ல லாபம் அடைவர். உள்ளூர் மட்டுமின்றி பெங்களூரு, ஓசூர், சேலம், திண்டுக்கல், மதுரை, ராஜபாளையம், சத்தியமங்கலம், திருவில்லிபுத்தூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்தும் லாரி லாரியாக பூக்கள் வந்திறங்கின. வியாபாரிகளின் கூட்டம் அலை மோதியது.

சிறப்பு சந்தை வியாபாரத்தில் மட்டும் ஒரே நாளில் 70 டன் பூக்கள் கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டன. இவற்றில் கிரேந்தி மட்டும் 25 டன் விற்பனையானது. ஓணம் பண்டிகையையொட்டி கடந்த 10 நாட்களில் 300 டன், அதாவது 3 லட்சம் கிலோ மலர்கள் கேரள மாநிலத்தவர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன’ என்றனர்.

பிச்சி பூ ரூ.1,000

மலர்கள் கொள்முதல் செய்ய வந்திருந்த பாலக்காட்டை சேர்ந்த ஜெயநாராயணன் கூறும்போது, ‘தோவாளை மலர் சந்தைக்கு பூக் கள் அதிகமாக வந்ததால் விலை யில் பெரிய அளவில் மாற்றமில்லை. மல்லிகை கிலோ ரூ.700, பிச்சி ரூ.1,000-க்கு விற்பனையானது. மற்றபடி சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.250, கிரேந்தி ரூ.55, வாடாமல்லி ரூ.250, பச்சை கட்டு இலை ரூ.10, தாமரை ஒன்று ரூ.10, துளசி ரூ.30, ஓசூர் ரோஜா ரூ.250 என கிடைத்தது’ என்றார்.

SCROLL FOR NEXT