தமிழகம்

தமிழகம், புதுச்சேரியில் 4 நாளுக்கு பனிமூட்டம் நிலவும்

செய்திப்பிரிவு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தை ஒட்டிய பகுதிகளில் காற்று சுழற்சி ஏதும் நிலவவில்லை. அதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளது. பெரும்பாலான இடங்களில் காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒருசில இடங்களில் லேசான பனிமூட்டம் ஏற்படும்.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப்பகுதியான உதகமண்டலத்தில் 7.1 டிகிரி, கொடைக்கானலில் 9.8 டிகிரி, குன்னூரில் 10.8 டிகிரி,வால்பாறையில் 11 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. நிலப்பகுதியான திருத்தணியில் 15.5 டிகிரி, தருமபுரியில் 18 டிகிரி, வேலூரில் 18.4 டிகிரி, புதுச்சேரி, கோவை ஆகிய இடங்களில் தலா 19.4 டிகிரி, நாமக்கல்லில் 19.5 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

SCROLL FOR NEXT