அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் இணைந்துநடத்திய அறிவியல் திருவிழா விநாடி - வினா இறுதிச் சுற்றுக்கு 3 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன.
அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் சார்பில் அறிவியல் திருவிழா விநாடி - வினா போட்டி மேடவாக்கத்தில் உள்ள செயின்ட் ஜான்ஸ் பப்ளிக்பள்ளி அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னையை சேர்ந்தநூற்றுக்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றன. காஞ்சிபுரம் மாவட்டக் கல்விஅலுவலர் தாமோதரன், பள்ளி முதல்வர் சாந்தி சாமுவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விநாடி - வினா நிகழ்வை குவிஸ் மாஸ்டர் அரவிந்த் ராஜீவ், அஜய் கிருஷ்ணா இருவரும் நடத்தினர். முதல் சுற்று எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றன.
இதில், இறுதிச்சுற்று போட்டிக்கு மயிலாப்பூர் வித்யாமந்திர், முகலிவாக்கம் ஓலோ ஜி டெக் ஸ்கூல், பெருங்குடி தி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டன. போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள், பரிசுகளை அமிர்தா ஸ்கூல் ஆஃப் இன்ஜினீயரிங் மார்க்கெட்டிங் அலுவலர் பிரசாந்த் சசிதரன் வழங்கினார்.
இந்நிகழ்வை ‘இந்து தமிழ் திசை’ முதுநிலை உதவி ஆசிரியர் மு.முருகேஷ் தொகுத்து வழங்கினார்.