தமிழகம்

முழு அடைப்புக்கு வணிகர் சங்க பேரவை ஆதரவு

செய்திப்பிரிவு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் நாகர்கோவிலில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

சசிபெருமாள் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

மதுவிலக்கை அமல்படுத்த வலியறுத்தி ஆகஸ்ட் 4 ம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை ஆதரவு தெரிவிக்கிறது. அன்றைய தினம் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்துக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும்” என்றார்.

பழ.நெடுமாறன் ஆதரவு:

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி நாளை நடைபெறும் கடை யடைப்புப் போராட்டத்தில் தமிழர் தேசிய முன்னணி பங்கேற்கும் என்று அந்த அமைப்பின் தலை வர் பழ.நெடுமாறன் தஞ்சா வூரில் நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT