தமிழகம்

சென்னை - மதுரை தேஜஸ் சொகுசு ரயிலில் இலவச வைஃபை அறிமுகம்

செய்திப்பிரிவு

சர்வதேச தரத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களோடு சென்னை பெரம்பூர் ஐசிஎப்-ல் தயாரிக்கப்பட்ட சொகுசு ரயில் பெட்டிகளுடன் தேஜஸ் ரயில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை எழும்பூர் - மதுரை இடையே இயக்கப்படும் இந்த ரயில்களின் சேவைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களில் தொழில்நுட்ப குளறுபடிகள் ஏற்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். தற்போது குறைகள் களையப்பட்டு பயணிகளுக்கு மேலும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘வெளிநாட்டு தொழில்நுட்பம் மூலம் தேஜஸ் ரயில் பெட்டிகளில் பயணிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள ‘இன்போக்டெக்’ வசதியில் வீடியோ திரைகளில் அடிக்கடி தொழில்நுட்ப குறைபாடு ஏற்பட்டதால் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள், திரைகள் நீக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, பயணிகள் எளிமையாக பயன்படுத்தும் வகையில் தற்போது இலவச வைஃபை வசதியுடன் கூடிய ‘மேஜிக் பாக்ஸ்’ என்ற புதிய பொழுதுபோக்கு அம்சங்களை அறிமுகம் செய்துள்ளோம். பயணிகள் இந்த வசதியை தங்களது செல்போன்கள் மூலம் இணைத்துக் கொண்டு திரைப்படங்களை காண முடியும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT